ராஜஸ்தான் ராயல்ஸ் தனக்கு ஒரு அணி மட்டுமல்ல, இது வீடு என ராஜஸ்தான் அணியில் இணைந்தது குறித்து ஜடேஜா மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தனக்கு முதல் மேடையையும், முதல் வெற்றியின் சுவையையும் கொடுத்தது ராஜஸ்தான் அணி என்றார். இங்கு மீண்டும் வருவது மிகவும் சிறப்பு என தெரிவித்த ஜடேஜா, இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல, இது வீடு என நெகிழ்ச்சி தெரிவித்தார். அங்குதான் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதாகவும், இந்த குழுவுடன் இன்னும் பலவற்றை வெல்வேன் என்று நம்புவதாகவும் ஜடேஜா தெரிவித்தார்.