22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 14 பிரஞ்ச் ஓபன் பட்டங்கள், ஒரு ஒலிம்பிக் தங்கம்னு 20 ஆண்டுகளுக்கு மேல டென்னிஸ் உலகுல முடிசூடா மன்னனா இருந்த ஸ்பெயின் நாட்ட சேர்ந்த ரஃபேல் நடால், டேவிஸ் கோப்பையில நெதர்லாந்துக்கு எதிரான போட்டியுடன் ஓய்வுபெற்றிருக்காரு.ரஃபேல் நடால் தனது 19வது வயதில் முதல் பிரஞ்ச் ஓபன் பட்டத்த ஜெயிச்சு தனது வருகைய டென்னிஸ் உலகுக்கு அறிவிச்சாரு. 2005ல இருந்து 2007 இடையிலான காலக்கட்டத்துல களிமண் களத்துல நடந்த 81 போட்டிகள்ல தொடர்ந்து வெற்றிய பதிவு செஞ்சு டென்னிஸ் அரங்கங்களை அதிரவச்சாரு. பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்ல நடால் 116 போட்டிகள்ல விளையாடியிருக்காரு. அதுல வெறும் 4 போட்டிகள்ல மட்டுமே தோல்வியடைஞ்சிருக்காரு அப்படிங்கறதை பாக்கும்போது அவரோட ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்துச்சுன்னு புரிஞ்சுக்க முடியும். பிரஞ்ச் ஓபன் டென்னிஸ்ல 97 சதவிகித வெற்றிகள பதிவு செய்துள்ள ரஃபேல் நடால் ‘KING OF CLAY’னு புகழப்படுறாரு. களிமண் ஆடுகளங்கள்ல ரஃபேல் நடால் சந்தித்த பெரும்பாலான இறுதிப்போட்டிகள்ல வெற்றிய தன்வசப்படுத்தியிருக்காரு. டென்னிஸ்ல ரஃபேல் நடாலின் ஆதிக்கத்த களிமண் களங்கள்ல மட்டும் அடக்கிட முடியாது. அதுக்கு அவர் ஜெயிச்சிருக்கற 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களே உதாரணம். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள வென்ற வீரர்களின் பட்டியல்ல இரண்டாவது இடத்துல இருக்காரு நடால். எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரஃபேல் நடால் ஒலிம்பிக் பதக்கத்தையும் விட்டுவைக்கல. 2008 ஒலிம்பிக்கில தங்கப்பதக்கத்த ஜெயிச்சு மேலும் ஒரு சாதனைய படைச்சாரு. ஏடிபி தரவரிசையில 17 ஆண்டுகளா முதல் பத்து இடங்களுக்குள்ள இருக்கும் நடால் 92 ஏடிபி பட்டங்களை ஜெயிச்சிருக்காரு. ரபேல் நடால் உலகின் நம்பர் 1 வீரரா 209 வாரங்கள் வரைக்கும் இருந்திருக்காரு. மேலும் 5 டேவிஸ் கோப்பைகளையும் தனது நாட்டுக்காக பெற்று கொடுத்திருக்காரு.