ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிதி பற்றாக்குறை மற்றும் சாம் கரணின் வெளிநாட்டு வீரர் என்ற அந்தஸ்து காரணமாக சிஎஸ்கேவுக்கு சஞ்சு சாம்சன் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவையும், சாம் கரணையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்ப, இரு அணிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 48 மணி நேரத்தில் அது இறுதி செய்யப்படும் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர் கோட்டா முடிந்து விட்டதால் சாம் கரணை எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த வீரர் பரிமாற்றம் குறித்து பிசிசிஐக்கு இரு அணிகளும் தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வீரர் பரிமாற்றம் எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.