புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில், புனேவை வீழ்த்தி 2வது முறையாக தபாங் டெல்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது. டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின. ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20க்கு 14 என முன்னிலை பெற்றது. இறுதியில், தபாங் டெல்லி அணி 31க்கு 28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.