உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் பிரணாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்ட பிரணாய், 21க்கு 18, 21க்கு 15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.