23ஆவது FIFA கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்க, கனடா மற்றும் மெக்சிகோவில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் உலக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுக்கான போட்டியில் அர்மீனியாவை 9க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி பெற்றது. 6ஆவது முறையாக உலகக் கோப்பை தொடரில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.