பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார். பிரான்சில் நடைபெற்ற போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் ஜேம் முனார் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6க்கு 1, 6க்கு 3 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.