ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி ஆஸ்திரேலியாவின் Perth மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.