விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பச்சையம்மாள் பழைய ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மரக்காணம் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மூதாட்டியின் வீடு மற்றும் பக்கத்து வீடான சம்மந்தம் என்பவரின் வீடும் திடீரென இடிந்து விபந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மரக்காணம் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.