இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வடகிழக்கு அணி முதல் பாதியில் 2 கோல்கள் அடித்தது. ஆனால் ஒடிசா அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஒடிசா அணி இரு கோல்கள் அடிக்க, பதிலுக்கு வடகிழக்கு அணியும் மற்றொரு கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.