அடுத்த ஆண்டு நடைபெறும் 'டி-20' உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி இந்தியாவின் அகமதபாத் மைதானத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மைதானங்களை பி.சி.சி.ஐ இறுதி செய்துள்ளது. அதன்படி இந்தியாவின் அகமதாபாத், டில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் உள்ள மைதானங்களில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது.