சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெலாரசின் சபலென்கா முதலிடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். விம்பிள்டன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்திலும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்காவின் அமென்டா அனிசிமோவா 5 இடம் முன்னேறி 7-வது இடமும் பிடித்துள்ளார்.