பெங்களூரு நகரில் சுமார் ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், பொம்மசந்திராவில் புதிய மைதானம் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.