இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக விக்கெட் கீப்பரான ரிஷப் பண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வை அறிவித்தார். இதனால் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் புதிய கேப்டனை தேடும் பணியில் பி.சி.சி.ஐ. இறங்கியுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.