டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்தார். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 6 பேர் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 84.03 மீட்டர் ஈட்டி தூரம் எறிந்து 8 ஆம் இடம் பிடித்து நீர்ஜ் சோப்ரா பதக்க வாய்ப்பை இழந்தார். இருப்பினும் இந்தியாவின் சச்சின் யாதவ் மட்டும் 4ஆம் இடத்தில் இருந்து பதக்க வாய்ப்பில் நீடிக்கிறார்.