நீரஜ் சோப்ரா கிளாசிக் முதலாவது சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, JSW ஸ்போர்ட்ஸ் மற்றும் இந்திய தடகள சம்மேளனம், உலக தடகள சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த போட்டியை நடத்துகிறார். முதலில் மே 24ஆம் தேதி அரியானாவில் நடத்த திட்டமிடப்பட்டு, அங்கு தேவையான மின்னொளி வசதி இல்லாததால் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், பஹல்காம் தாக்குதல் பதற்றம் காரணமாக தள்ளிப்போடப்பட்ட இந்த போட்டி தற்போது நடைபெறவுள்ளது.