தேசிய பெடரேஷன் சீனியர் தடகள 'போல் வால்ட்' போட்டியில் தமிழக வீராங்கனை பவித்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழக வீராங்கனை பவித்ரா 4.00 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீராங்கனையான பரானிகா வெள்ளி பதக்கத்தை வென்றார்.