ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம் சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், கேரள வருகையை ரத்து செய்துள்ளது. பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளாவுக்கு வருகை தந்து விளையாட இருந்தது. இது ரத்தானதால், கேரள அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.