மேஜர் லீக் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வாஷிங்டன் அணி வீழ்த்தியது. அதிரடியாக ஆடிய கேப்டன் மேக்ஸ்வெல் 49 பந்துகளில், 2 பவுண்டரி, 13 சிக்சர்களோடு 106 ரன்கள் எடுத்ததன் மூலம், தனது 8வது சத்தத்தை பதிவுசெய்தார். இதன்படி அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 8 சதங்களுடன் 4ஆம் இடத்தில் உள்ள ரோகித் சர்மா, மைக்கேல் கிலின்ஜெர், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அசாம் 11 சதங்களுடன் 2ஆம் இடத்திலும், ரீலி ரோசோவ், விராட் கோலி ஆகியோர் தலா 9 சதங்களுடன் 3ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : விஜயின் கடைசி படம் என சொல்லப்படும் ”ஜனநாயகன்” படத்தின் Glimpse வீடியோ இன்று வெளியாக வாய்ப்பு