மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ((Alexander Zverev)), ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் ((Davidovich))உடன் மோதினார். இதில் 2க்கு 6, 7க்கு 6 , 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.