ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் லக்னோ வீரர் திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏற்கனவே பெற்ற 3 தகுதி இழப்பு புள்ளிகளுடன் சேர்த்து 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.