ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கைமாறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அல்லது அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ராஜஸ்தான் அணியை வாங்குவார் என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்ஜிவ் கோயங்கோவின் சகோதரர் ஹர்ஷா கோயங்கோ உத்தேசமாக கூறியுள்ளார்.