இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 374 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 4 விக்கெட்களை வீழ்த்தி போட்டியை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெல்வதன் மூலம் தொடரை 2க்கு 2 என இந்திய அணி சமன் செய்ய வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்த போட்டியை இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில், ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையையும் கைப்பற்றும்.