குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் 2025 சூப்பர் யுனைடெட் ரேபிட் செஸ் போட்டியில், உலக சாம்பியனும், கிராண்ட் மாஸ்டருமான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ரேபிட் செஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவிய குகேஷ், அதற்கு பிறகு நடைபெற்ற 5 சுற்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஆறாவது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற 7 மற்றும் 8-வது சுற்றுகள் டிராவில் முடிந்ததால், குகேஷ் 14 புள்ளிகளுடன் ரேபிட் செஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.