குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் சதுரங்க போட்டியின் ரேபிட் பிரிவில் பட்டம் வென்ற உலக சாம்பியன் குகேஷ், பிளிட்ஸ் பிரிவில் சக தமிழக வீரர் பிரக்ஞானந்தாவிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். ரேபிட் பிரிவில் 6 சுற்றுகளில் வெற்றி பெற்ற குகேஷ், அனைவரையும் விட 3 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால் பிளிட்ஸ் பிரிவில் முதல் 5 சுற்றுகளிலும் தோல்வி அடைந்தவர், ஆறாவது சுற்றை டிரா செய்தார். தொடர்ந்து 7வது சுற்றிலும், பின்னர் 8வது சுற்றில் பிரக்ஞானந்தாவிடமும் தோல்வி அடைந்தார். இதனிடையே உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன், பிளிட்ஸ் பிரிவின் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.