நடப்பு உலக சாம்பியனும், தமிழ்நாட்டு கிராண்ட் மாஸ்டருமான குகேஷ், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்ஸனை ரேபிட் செஸ் போட்டியில் மீண்டும் வீழ்த்தி அசத்தியுள்ளார். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் Rapid மற்றும் Blitz சதுரங்க போட்டியில், ஆறாவது சுற்றில் கருப்பு காய்களுடன் களமிறங்கிய குகேஷ், அபாரமாக விளையாடி நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். சமீபத்தில் நார்வேயில் நடந்த போட்டியில் குகேஷிடம் தோல்வியடைந்த போது பலமாக மேசையை தட்டிய கார்ல்சன், இம்முறை அது போல் எதுவும் செய்யாமல் அமைதி காத்தார்.