உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை குவித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் தன் வசமாக்கியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 27 ரன்கள் அடித்த போது இந்த சாதனை படைத்தார்.