பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில அலெஸ்டர் குக்கோட சாதனைய முறியடிச்சு அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி வீரர் என்ற சாதனைய ஜோ ரூட் படைச்சு இருக்காரு. 147 டெஸ்ட் போட்டிகள்ல விளையாடி இருக்கிற ஜோ ரூட் 12 ஆயிரத்து 500 ரன்களுக்கு மேல எடுத்து இந்த சாதனைய படைச்சிருக்காரு. அது மட்டுமல்லாம இந்த போட்டியில சர்வதேச கிரிக்கெட்ல 20 ஆயிரம் ரன்கள கடந்த வீரர் என்ற சாதனையயும் ஜோ ரூட் படைச்சிருக்காரு. மேலும் இந்த போட்டியில இரட்டை சதம் விளாசினது மூலமா டெஸ்ட் கிரிக்கெட்டுல 6 இரட்டை சதம் விளாசிய சச்சினின் சாதனையும் ஜோ ரூட் சமன் செய்திருக்காரு.