ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 30 ஓவர்களில் நிதானமாக ஆடி கடைசி 20 ஓவர்களில் அதிரடியாக ஆடினால் அதிக ரன்களை குவிக்க முடியும் என இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். 2027 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு 25 திறமையான வீரர்களை கண்டறிய திட்டமிட்டுள்ளதாக கம்பீர் கூறினார். ஜெய்ஸ்வால் போன்ற திறமையான வீரர் 30 ஓவர்கள் தாக்குபிடித்தால் சதத்தை நெருங்கிவிடலாம் என்றார்.