இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.