மைதானத்திற்கு சென்றுத் திரும்பும்போது அணியுடன் பேருந்தில்தான் பயணிக்க வேண்டும் என்ற பிசிசிஐ விதியை ஜடேஜா மீறிய நிலையில் அணியின் நலனுக்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பு , ஜடேஜா மற்ற வீரர்களுக்கு மாறாக சற்று முன்னதாகவே மைதானத்திற்கு வந்தது பிசிசிஐ-யின் விதி மீறலாக பார்க்கப்படுகிறது.