இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் கோகோ காப் , இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினியை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாவ்லினி 6 க்கு 4, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.