இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்க வீரர் டாமி பால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ரோமில் நடைபெற்று வரும் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், செக் நாட்டின் டோமாஸ் மச்சாக் உடன் மோதினார். இதில் 6க்கு 3, 6க்கு 7 மற்றும் 6க்கு 4 என்ற செட் கணக்கில், அமெரிக்க வீரர் டாமி பால் வெற்றி பெற்றார்.