ரோமில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் அதிர்ச்சி தோல்வியைடந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பவுல் உடன் மோதிய அவர், 5க்கு 7, 3க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.