ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் இன்று கோவா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கோவாவில் இரவு 7:30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள கோவா அணி, இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.