ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், 3க்கு 2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி, பஞ்சாப் எஃப்.சி. அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. - பஞ்சாப் எஃப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் வில்மர் ஜோர்டான் இரண்டு கோல்கள் அடித்தார். பஞ்சாப் அணி சார்பில் லூகா 2 கோல்களும், அஸ்மிர் ஒரு கோலும் அடித்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எஃப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.