இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள், வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 17 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் தொடர் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளதாகவும்.நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.