அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் கோச் ஜேபி டுமினி பீல்டிங் செய்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அபுதாபியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டது. இதனால் சில வீரர்கள் பெவிலியன் திரும்பியதால், 10 வீரர்களுடன் சேர்ந்து, டுமினியும் சிறிது நேரம் பீல்டிங் செய்தார்.