கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இன்டர் மிலன் அணி திரில் வெற்றி பெற்றது. சியட்டி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மிலன் மற்றும் உரவா ரெட் டைமண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலை வகித்த நிலையில், கடைசி நிமிடத்தில் வாலென்டின் கார்போனி கோல் அடித்ததால் இன்டர் மிலன் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.