இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அகமதாபாத் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணும் நிலையில், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.இதையும் படியுங்கள் : ACC அலுவலகத்திற்கு வந்து கோப்பையை பெறலாம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நக்வி அழைப்பு