ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிகள் இன்று அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற கேள்வி விவாதப் பொருளாக உள்ள நிலையில், இருவரையும் பிசிசிஐ தேர்வுக்குழு தேர்வு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அதிகாரப்பூர்வ விளம்பர போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கோலி மற்றும் ரோகித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதால், இருவரும் அணியில் இருப்பது உறுதி என்பதற்கான அடையாளம் என்று நம்பப்படுகிறது.இதையும் படியுங்கள் : 2026 உலக கோப்பை தொடருக்கான கால்பந்து அறிமுகம் தொடரை நடத்தும் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா