டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஓடன்ஸ் நகரில் நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் லக்சயா சென், அயர்லாந்தின் நட் நியென் உடன் மோதினார். முதல் செட்டை 10க்கு 21 என லக்ஷயா சென் இழந்த நிலையில், அடுத்த இரு செட்களையும் 21க்கு 8, 21க்கு 18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.