ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா மகளிர் அணியினரும் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்தியாவின் மகளிர் அணி சார்பில் வண்டிகா அகர்வால், திவ்யா தேஷ்முக், ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதிச் சுற்றுக்கானப் போட்டியில் அஸர்பைஜானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது.