இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான 32வயதான வேதா கிருஷ்ணமூர்த்தி அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 829 ரன்களும், 76 டி20 போட்டிகளில் விளையாடி 875 ரன்களும் வேதா கிருஷ்ணமூர்த்தி அடித்துள்ளார். 2017 மகளிர் ஒருநாள் மற்றும் 2020 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் வேதா கிருஷ்ணமூர்த்தி கடைசியாக இந்திய அணியில் 2020-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடினார்.இதையும் படியுங்கள் : இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 544 ரன்கள் குவிப்பு..!