இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நிச்சயதார்த்தத்தை, சக வீராங்கனைகளுடன் இணைந்து இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் வித்தியாசமான ஸ்டைலில் அறிவித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை திருமணம் செய்ய உள்ளதாக முன்பு வதந்தி பரவியது. ஆனால் அதனை உறுதிப்படுத்தும் விதமாக, வீடியோவின் கடைசியில், ஸ்மிருதி மந்தனா தனது மோதிர விரலில் அணிந்திருக்கும் மோதிரத்தை கேமராவிற்கு காட்டி, நீண்டகால வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.