இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் இன்னிங்சில் இரட்டை சதம், 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150 ரன்களை கடந்த வீரர் என்ற ஆலன் பார்டரின் 45 ஆண்டு கால சாதனையை சமன் செய்துள்ள கில், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் சுனில் கவஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையையும் முறியடித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 300 ரன்களை கடந்த முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும், 4 இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.