இந்தியா - வங்கதேச அணிகள் மோதி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது. முன்னதாக முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் 81 ரன்கள் இந்திய அணி குவித்துள்ள நிலையில் சுப்மன் கில்லும், ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர்.