12வது ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பினான தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் தில்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங் மற்றும் அமித் ரோகிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றது.