டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்ததன் மூலம், ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை இழந்த வங்கதேச அணி 5வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.