ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டியில் இன்று இந்தியா - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் சனிக்கிழமை முதல் சூப்பர் 4 சுற்று தொடங்குகிறது. இந்த நிலையில் ஏ பிரிவில் இருந்து எதிர்பார்த்தபடி இந்தியா முதலிடத்தில் இருந்தும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலிருந்தும் தகுதி பெற்றிருக்கிறது.